தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. ஆனால் அப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியா க செய்யாமல் போனால், உடற்பயி ற்சி செய்வதே வீணாகிவிடும்.
உடற்பயிற்சிக்கு பின், மறுநாள் மீண்டும் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு போதிய ஓய்வு தேவைப் படும். அத்தகைய ஓய்வு கிடைக்காமல் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகளை மேற் கொண்டு வந்தால், உடலில் பிரச்சனைகளை சந்திக்க க்கூடும்.
எனவே உடற்பயிற்சி செய்தபின் என்னவெல்லாம் செய்ய வேண்டு மென்று கேட்டுத்தெரிந்து கொண்டு, அவற்றைப்பின்பற்ற ஆரம்பியுங்கள். இங்குஉடற்பயிற்சிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டியவை களை பார்க்கலாம்..
• உடற்பயிற்சி செய்து முடித்த பின், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இப்படிசெய்வதால், கடுமையான உடற்பயிற்சியின் போது அதிகமாக இருந்த இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வந்து, இதனால் தீவிரமானபிரச்சனை ஏதும் நேராமல்தடுக்கும்.
• ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகமாக வியர்த்ததால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குடிப்புகுந்திருக்கும். அத்தகைய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தவறாமல் உடற் பயிற்சிக்கு பின், உடைகளை மாற்று வதோடு, அதனை துவைத்து விடவும் வேண்டும்.
உடையைமாற்றி துவைத்தபின், குளித்துவிடவேண்டு ம். வெறும் உடையை மட்டும் மாற்றினால், சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, பாக் டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆகவே உடற்பயிற்சிக்கு பின்னர் குளித்துவிடு வது நல்லது.
•உடற்பயிற்சிக்கு பின்போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடற்பயிற்சியின்போது கடுமையான காயங்களைக் கண்ட உடல் தசைகள் ரிலாக்ஸ் ஆகாது. ஆகவே உ டற்பயிற்சிக்குபின்னர் எவ்வளவு தண்ணீர் குடிக்கமுடியுமோ அவ் வளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடல் பழைய நிலைக்கு வரும்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது