அதிரையில் பல பகுதிகளில் உடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற கோரி இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.இன்று காலை அதிரை நகர செயலாளர் முஹம்மத் முகைதீன் தலைமையில் அதிரை மின் வாரிய உதவி மின் பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்து உள்ளனர்.
அதில் அதிரையில் பல பகுதிகளில் மின் கம்பம் மோசமாகவும், சேதமடைந்தும் அபாய நிலையில் உள்ளது .மேலும் அதிரையில் முக்கியமாக ஜாவியா ரோட்டில் உள்ளதையும் மற்றும் 7 இடங்களை குறிப்பிட்டு உடனடியாக மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று உதவி மின் பொறியாளர் உறுதி அளித்து உள்ளார்.பார்ப்போம் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று.
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது