அதிரை மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் நடமாடும் மர்ம பெண்கள், எச்சரிக்கை!

0


அதிரைக்கு அருகாமையில் உள்ள கரிக்காடு என்னும் ஊரில் வசித்து வருபவர் கணபதி. இவர் பணிக்கு சென்ற பிறகு வீட்டில் அவருடைய மனைவி மட்டும் தனியாக இருப்பது வழக்கம். இந்நிலையில் ஒரு அவருடைய மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இவரது வீட்டின் வெளிக்கதவு தட்டப்பட்டது. யாரது..! என்று கேட்டவாரே நடந்து சென்று கதவைத் திறந்த இவரது மனைவி கண்டது நான்கு பெண்களை. 

அவரது மனைவி இந்த பெண்களை கண்டதும் யார் நீங்கள்? என்று கேட்பதற்க்கு முன்னரே அந்த புது பெண்கள் இவரிடம் நல்ல இருக்கீங்களா? பாத்து ரொம்ப நாள் ஆச்சு! ஆளே மாரிட்டீங்க போங்க! புது வீட்டுக்கு வந்தத சொல்லவே இல்ல! (இந்த தம்பதியினர் முன்பு அதிரை சுரைக்கா கொள்ளையில் வசித்து வந்தனர்) என்று பாசமான வார்த்தைகளை பேசி மயக்கினர். இவர்களின் இந்த பேச்சுக்கு பிறகு அந்த வீட்டு பெண்ணும் இவர்களிடம் கேட்க வந்த கேள்வியை மறந்து அந்த பெண்களை, இவர்கள் முன்பு பழக்கமானவர்கள் தாம், நாம் தான் மறந்து விட்டோம் என்று எண்ணி சகஜமாக அந்த பெண்களிடம் உரையாடினார் இந்த வீட்டு பெண். 

சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு இந்த நான்கு பெண்களில் ஒருவர் மிகவும் தாகமாக உள்ளது தண்ணீர் தாருங்கள் என்று கேட்டுள்ளார். உடனே அவர்களை இருக்க சொல்லிவிட்டு தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு சென்றார் அந்த பெண். அந்த பெண்ணுக்கு பின்னால் மெதுவாக சென்ற இந்த நான்கு பெண்களும் சமையலரையில் அந்த வீட்டு பெண்ணை சுற்றி வளைத்தனர். பின் எதோ புரியாத மொழியில் அவர்களுக்குள் சத்தமாக பேசிக்கொண்டனர். இதனை சற்றும் எதிர் பார்க்காத அந்த வீட்டு பெண் அதிர்ச்சி அடைந்தார். 

பின் இவர்களின் நடவடிக்கையை சற்றும் எதிர்பார்த்திடாத அந்த வீட்டு பெண் இவர்களின் மீது சந்தேகம் அடைந்து அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் வீட்டருகில் கூடி அந்த பெண்ணிடம் விசரித்ததில் அந்த பெண் நடந்ததை கூறியுள்ளார்.  உடனே தப்பிக்க முயன்ற அந்த பெண்களை பிடித்து பொதுமக்கள் வசமாக அடித்து காவல் துரையிடம் ஒப்படைத்தனர். 

பொதுமக்களிடம் விசாரித்ததில் இந்த பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் நல்லவர் போல் பழகி வீட்டை கொள்ளையடித்து செல்லும் கும்பல். இவர்கள் பல பகுதிகளில் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டு தற்பொழுது அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தங்கள் கைவரிசையை காட்டுவதற்க்காக வந்ததாக கூறுகின்றனர். 

எனவே தனியாக வீட்டில் இருக்கும் பெண்களே! நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது கதவு தட்டப்பட்டால் யார் என்று விசாரித்து கதவை திரந்து விடுங்கள். அந்நிய நபர்களை எக்காரணத்தைக் கொண்டும் வீட்டிற்க்குள் அனுமதிக்காதீர்கள்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)