9 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்.
'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேட்பாளர் பட்டியல் விவரம்:
வடசென்னை - உ. வாசுகி
கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன்
கன்னியாகுமரி - ஏ.வி. பெல்லார்மின்
மதுரை - பா. விக்ரமன்
திருச்சி - எஸ். ஸ்ரீதர்
விருதுநகர் - கே. சாமுவேல்ராஜ்
திண்டுக்கல் - என். பாண்டி
விழுப்புரம் (தனி) - ஜி. ஆனந்தன்
தஞ்சாவூர் - எஸ். தமிழ்ச்செல்வி
முன்னதாக, அதிமுக அணியில் இருந்து பிரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தலா 9 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்தன.
தென்காசி, நாகப்பட்டினம், புதுச்சேரி, திருப்பூர், சிவகங்கை, தருமபுரி, கடலூர், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது