அதிரையரின் திறமையை கண்டு வியக்கும் இந்திய அரசியல் தலைவர்கள்!

0





























அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் பாருக் (கம்பியூட்டர் பாருக்). இவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் பல வருடங்களாக இருந்து வருகிறார்.

இவர் பல வருடங்களாக அரசியல் தலைவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் சம்மந்தமான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்திய பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்க், உள்துறை அமைச்சர் ஷுசில் குமார் ஷின்டே, திரு.ப.சிதம்பரம், திரு.ராகுல் காந்தி, திரு.குலாம் நபி ஆசாத் போன்ற தேசிய காங்கிரஸ் தலைவர்களுக்கும், திரு.ஜி.கே.வாசன், திரு.ஞானதீசிகன், திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திரு.தங்கபாலு போன்ற தமிழக அரசியல் பிரமுகர்களுக்கும் இவர் தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார நுணுக்கங்களைப் பற்றிய ஆலோசனைகளையும் தன்னுடைய யோசனைகளையும் பல வருடமாக கடிதம் மூலம் அனுப்பி வருகிறார்.

இதை படித்து பார்த்த தலைவர்களும்  இவருக்கு பதில் கடிதம் மூலம் விளக்கம் அளித்து வருகின்றனர். இவர் பாரத பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கும், திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கும் ரயில்வே தொடர்பாக கடிதம் மூலம் வழங்கிய ஆலோசனை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்.

இவர் பாரத பிரதமர் திரு.மன்மோகன் சிங், நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம், அவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் திரு.ராகுல் காந்தி, அவர்களுக்கும் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து பல முறை ஆலோசனை எழுதியுள்ளார்.

1990 ம் ஆண்டு முதல் ரயில்வே நிர்வாகத்துக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இது போல தங்கம் விலை உயர்வு, இலங்கை தமிழர் பிரச்சனை, ஆசிட் வீச்சு, பாஸ்போர்ட், காமென்வெல்த் மாநாடு தொடர்பான ஆலோசனை போன்ற பல ஆலோசனைகளை தேசிய தலைவர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி வருகின்றார்.


19/06/2013 முதல் இவர் கொஞ்சம் கொஞ்சமாக 26 பக்கங்களில் அரசியல், ஆன்மீகம் பொருளாதாரம் பற்றி நோட்டிஸ் வெளியிட்டுள்ளார். மேலும் வெளியிட்டுள்ளார. மேலும் வெளியிட உள்ளார். எல்லா பத்திரிக்கைகளுக்கும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் நோட்டிஸ்களை தொடர்ந்து அனுப்பி வருகிறார்.

இவர் அரசியல் தலைவர்களுக்கு எழுதிய பல கடிதங்களுள் சிலவற்றையும் அவருக்கு தலைவர்களிடம் வந்த பதில் கடிதங்களுள் சிலவற்றையும் கீழே பார்ப்போம்.

ஜீ.கே. வாசன் அவர்களிடம் இருந்து வந்த பதில் கடிதம்

பொருளாதாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து இவருக்கு  வந்த பதில் கடிதம்



பாஸ்போர்ட் நிர்வாகம் செயல்படுத்தும் முக்கிய தகவல்கள் EMPLOYMENT & NRI TIMES WEEKLY இதழில் (MUMBAI DEC 14-20,2012) அன்று வெளியானது.







காமன்வெல்த் மாநாடு குறித்தும் அரசியல் சிக்கல்கள் குறித்த இவரின் கடிதம்

பாஸ்போர்ட் குறித்து இவர் எழுதிய ஆலோசனைகள்யின் விபரங்கள் தினகரன் நாளிதழில் வந்துள்ளது.

தென்னக ரயில்வேயில் இருந்து வந்த பதில் கடிதம்
இவர் இது போன்று மேலும் பல கடிதங்களை அனுப்பியுள்ளார். இதனால் வரும் நாடாளமன்ற தேர்தலில் இவருடைய பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. இன்னும் அறிவிக்கப்படாத இரண்டு தொகுதிகளில் தனக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இவர் பேசிய நேர்காணல் 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)