
இன்று தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் போட்டிபோடும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலையும் அவர்களுக்கான சின்னங்களையும் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதில் சுயேட்சை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்படாத வேட்பாளர்களுக்கு இன்று சின்னங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில் வழக்கமாக வழங்கப்படுகின்ற 87 சின்னங்களை தவிரத்து புதிதாக செருப்பு, பச்சை மிளகாய், பேனா நுனி ஆகிய 3 சின்னங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதில் பல சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு செருப்பு சின்னத்தை போட்டிபோட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இறுதியாக குழுக்கல் முறையில் அந்த சின்னம் மத்திய சென்னை வேட்பாளருக்கு கிடைத்தது.
ஆம் ஆத்மி கட்சி துடைப்பம் சின்னத்தை வைத்து சாதித்தது போல் இவர்கள் செருப்பு சின்னதை வைத்து வெற்றி பெற நினைத்தார்களோ என்னவோ!
ஆக்கம்: அதிரை பிறை

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது