அதிரை அருகே கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து (படங்கள் இணைப்பு)

0
திருவாரூர், மாவட்டம்  முத்துப்பேட்டை அருகே கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேஸ் லீக்காகி வருவதால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் அருகிலிருக்கும் நரிமனத்திலிருந்து நேற்றிரவு கேஸ் டேங்கர் லாரி ஒன்று இளையான்குடி சென்று கொண்டிருந்தது. திருவாரூர், மாவட்டம்  முத்துப்பேட்டை அருகிலிருக்கும் பாமினி ஆற்றுப்பாலத்தை கடந்து  சுந்தரம் எனும் கிராமம் அருகில் பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. இரவு பதினொரு மணி அளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது.

அதனால் டேங்கரில் இருந்த கேஸ் லீக்காகி அந்த பகுதி முழுவதும் ஒருவித நாற்றம் வந்திருக்கிறது. அதன்பிறகு அந்த  பகுதியில் இருந்த  மக்கள் அருகிலிருந்த  முத்துப்பேட்டை  காவல்நிலையத்திற்கு  தகவல் கொடுத்துள்ளனர். அவசர கதியில் வந்த காவல்துறையினர்  தீயணைப்புத்துறைக்கும்  தகவல் கூறி இருக்கிறார்கள்.  அத்துடன்  இந்தியன்  ஆயில்  கார்ப்பரேஷனுக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

அந்த பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும் ஒரு கோயிலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். டேங்கரில் 37 டன் கேஸ் இருப்பதாக சொல்கிறார்கள். இதன் அருகில் சென்று சீப்பால் தலையை சீவினால் கூட அது வெடித்துவிடும் அபாயம் இருப்பதால் தூத்துக்குடி - நாகப்பட்டினத்திற்கான கிழக்கு கடற்கரை சாலை மூடப்பட்டிருக்கிறது. டேங்கரை ஓட்டி வந்த டிரைவர் சிறு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். கேஸ் லீக்காவதை தடுத்து நிறுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது முடிந்ததும் தான் டேங்கரை வெளியே தூக்க முடியும்  என்றும், அதுவரை  யாரும் அருகில் செல்லவேண்டாம்  என்றும்,  படம்  எடுக்கவோ, செல்போனில் பேசவோ வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள்.




























புகைப்படங்கள்: muthupetnews

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)