![]() |
| தீவிர பிரச்சாரத்தில் அதிரை முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் தி.மு.க நகர செயலாளர் |
| சிறப்புரையாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லீம் லீக் மாநில செயாலாளர் |
இன்று நமதூர் பேருந்து நிலையத்தில் தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் திரு.டி.ஆர்.பாலு அவர்களுக்கு ஆதரவு திரட்டி மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைப்பெற்றது.
சரியாக 5:00 மணிக்கு துவங்கிய இந்த பொதுக்கூட்டத்தில் ஹாஜி.ஓ.கே.எம்.சிபகத்துல்லாஹ் அவர்கள் வரவேற்ப்புரை யாற்றினார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அதிரை நகர துணை தலைவர் கவிஞர் எஸ்.எஸ். தாஹா அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கினார்கள்.
இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர தலைவர் கே.கே.ஹாஜா அவர்கள் தலைமை தாங்க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர துணை தலைவர் எஸ்.எம்.அக்பர் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர பொருளாளர் கே.எஸ்.ஏ.அப்துர் ரஹ்மான் அவர்கள், அதிரை நகர தி.மு.க வின் செயலாளர் திரு. இராம குணசேகரன் அவர்கள், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மரைக்கான் (எ) அப்துல் கபூர் அவர்கள், S.D.P.I. கட்சியின் நகர தலைவர் யூ.அப்துர் ரஹ்மான் அவர்கள் அதிரை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த டி.புருசோத்தமன் அவர்கள் மற்றும் எஸ். திலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில துணை தலைவர் எஸ்.எஸ்.பி. சேக் நசுருத்தீன் அவர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர செயலாளர் வழக்கறிஞர் ஏ.முனாப் அவர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர துணை செயலாளர் ஏ.சேக் அப்துல்லாஹ் அவர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.சாகுல் ஹமீது அவர்களும் வாழ்த்துரையாற்றினார்கள்.
இதில் சிறப்பு விருந்தினாராக கலந்துக்கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் கோடை இடி நெல்லை அப்துல் மஜீது அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எச்.ஹாஜா அவர்கள் நன்றியுறையாற்றினார்கள். இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பிரதிநிதி ஜமால், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாணவரனியை சேர்ந்த இத்ரீஸ் அஹமது, மணிச்சுரை நிருபர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பல இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , S.D.P.I, தி.மு.க, ம.ம.க, வி.சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
| பிரச்சார மேடையில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் |
| தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டத்தில் வருகை தந்த அதிரை மக்கள் |
| முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஹாஜா அவர்களுக்கு பொன்னாடை அதிரை தி.மு.க நகர செயலாளர் குணசேகரன் |
| தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டத்தில் வருகை தந்த அதிரை மக்கள் |

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது