அதிரையில் இம்மாதம் 19ம் தேதி துவங்கிய APL எனும் அதிரை ப்ரீமியர் லீக்கின் முதல் அரை இறுதி சுற்று இன்று பகல் 3:00PM மணியளவில் அதிரை கிரானி மைதானத்தில் துவங்கியது. இவ்வாட்டத்தில் அதிரை WCC- வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணியும் VS தஞ்சாவூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற WCC அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் மட்டைப்பணியை செய்த தஞ்சாவூர் அணி நிர்னயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 128 ரன்களை எடுத்தது. 129 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மட்டைப்பணியை செய்த அதிரை WCC அணி 1.5 ஓவர் மீதமுள்ள நிலையில் 123 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம் தஞ்சாவூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றது.
சென்ற ஆண்டு APL இறுதி போட்டியில் இந்த தஞ்சாவூர் அணி AFCC அணியிடம் தேல்வியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது