தர்மபுரியிலிருந்து சுற்றுலா வந்த வேன் முத்துப்பேட்டை அருகே விபத்து. ஒருவர் பலி. சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 18 பேர் படுகாயம்.
முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரி அருகே பாலத்தின் சுவர் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இவர்கள் தர்மபுரியிலிருந்து சுற்றுலாக்காக ஒரு டெம்போ வேனில் புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று விட்டு நேற்று முன் தினம் இரவு முத்துப்பேட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றபோது வாகனம் நிலை தடுமாறி இந்த விபத்து நடந்தது.
இதில் பயணம் செய்து படுகாயம் அடைந்த 19 பேரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்பொழுது தர்மபுரி மாவட்டம், பரமக்குடி கோல்டன் தெருவை சேர்ந்த பூபாலன் மகன் ராஜ்குமார்(25) பலியானர். மேலும் படுகாயம் அடைந்த விவேக்(25), ராம்பிரசாத்(21), வினோத்(22), பாலாஜி(20), சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்(48) இவரது மகன் ரவிராகுல்(18) ஆகியோரை ஆகிய 6 பேரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள முருகன்(28), அசோக்(25), முரளி(22), திருமுருகன்(25), கார்த்திக்(30), அருண்குமார்(28), முருகேசன்(25), முருகேஷ்(25), பிரவீன்(24), கவியரசன்(18), சுப்பிரமணியன்(31) ஆகிய 12 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
இதில் ரமேஷ் ராமேஸ்வரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ரவிராகுல் வேளாங்கண்ணி அருகில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக சுற்றுலா வந்த இந்த வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
படம் செய்தி:
முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரியில் தர்மபுரியிலிருந்து சுற்றுலா வந்த வேன் பாலத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியானார். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை (MUTHUPPETTAI BBC)
.jpg)
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது