சம்சுதீன் காசிமி மற்றும் இருவர் விமானதில் சென்றபொழுது பிறையை பார்த்ததாக கூறியதையதை தலைமை காஜி நிராகரித்ததாக கூறப்படுகிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்த போது பிறை விமான பயணத்தின் போது சம்சுதீன் காசிமி மற்றும் இரண்டு சாட்சிகளுடன் பிறை தெளிவாக பார்க்கப்பட்டதாகவும் அதை தலைமை காஜி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.
சம்சுதீன் காஸிமி கூறியதாவது:
தலைமை காஜி அறிவிக்க மறுத்ததால், சமுதாய ஒற்றுமையை கருத்தில் கொண்டு 28.06.2014 அன்று பிறை தெரிந்தும் இரவு தராவீஹ் தொழுகை நடத்தப்படவில்லை. ஆனால் நோன்பு பர்ளு என்பதாலும், அதில் எந்தவித சமாதனத்திருக்கு இடமில்லை என்பதாலும் இந்த செய்தியை நம்புபவர்கள் மீது நோன்பு கடமை ஆகிறது. நாளை 29.06.2014 பகல் நோன்பு நோற்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------------------------
இதில் அதிகம் குழப்பம் வேண்டாம் என்ற அடிப்படையில், இதை ஏற்றுக்கொள்ள விரும்பியவர்கள் நோன்பு நோற்கலாம் என்றும் மறுப்பவர்கள் நாளை நோன்பு நோற்கலாம் என்றும் காசிமி கூறியுள்ளார். இத்தகவலால் அதிரையில் சற்று சலசலப்பு ஏற்ப்பட்டது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது