பொள்ளாச்சியை சேர்ந்த சிலர் சொகுசுப் பேருந்தில்
வேளாங்கன்னிக்கு சுற்றால்லா சென்றுவிட்டு பொள்ளாச்சிக்கு E.C.R. சாலை வழியாக திரும்பிக்கொண்டிருந்தனர்.
இப்பேருந்து தம்பிக்கோட்டை அருகே சென்று
கொண்டிருக்கும் போது தம்பிக்கோட்டை எல்லையில் இருந்து அடையாளம் தெரியாத இருவர் இரண்டு
மோட்டார் பைக்குகளில் பேருந்தை பின் தொடர்ந்து இடையூரு செய்தவாறு சென்றுள்ளனர்.
தம்பிக்கோட்டை சிவன் கோவில் அருகே செல்லும்
போது இவர்கள் இருவரும் வேகமாக சென்று பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். பின்னர்
அங்கிருந்த தங்களது நண்பர்களை அழைத்து இப்பேருந்தில் பயணம் செய்பவர்கள் எங்களிடம் பிரச்சனை
செய்கிறார்கள், நம் ஊருக்கு வந்து நம்மிடமே தகராறு செய்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.
இதனை அடுத்து கோபம் அடைந்த ஊர்கார்கள் அங்குள்ள
கற்களை ஏடுத்து பேருந்து கண்ணாடிகளை உடைத்தும் கட்டைகளால் பேருந்தை தாக்கியும் வெறிச்செயல்
புரிந்துள்ளனர்.



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது