டீச்சர்! டீச்சர்!! இவன் என்னை பார்த்து காப்பியடிக்கிறான் டீச்சர்!!!

Irshad Bin Jahaber Ali
0

பள்ளியின் முதல் நாளான நேற்றைய தினம் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாடுகளை பார்க்காமல் எழுத ஆசிரியர்கள் உத்தரவிடுவது வழக்கம். இதனையடுத்து சில மாணவர்கள் பார்க்காமல் எழுதுவதுமட்டுமல்லாமல், பல மாணவர்கள் வகுப்பில் சில மாணவர்களை காப்பியடித்து எழுதுவதும் வழக்கம். 
சிலர் மாணவர்கள், தன் பக்கத்திலிருக்கும் மாணவன் எதை எழுதினாலும் தன்னை பார்த்து காப்பியடிக்கிறான் என்று நினைத்து கொண்டு ஆசிரியரிடம், டீச்சர்! டீச்சர்!! இந்த பையன் என்னை பார்த்து காப்பியடிக்கிறான் டீச்சர்!!! என்று கோள் சொலவதும் உண்டு.

பிறகு ஆசிரியர் காப்பியடித்த மாணவனை (ஏன்டா அவன பார்த்து எழுதுர, அவனுக்கே ஒன்னும் தெறியாது, முதல் நாளே ஏன்டா திட்டுவங்குர) என்று காப்பியடித்த மாணவனை திட்டுவதும் வழக்கம். அதற்கு காப்பியடித்த மாணவன் மிஸ் நான் காப்பியடிக்கல அவன் தான் என்ன பார்த்து காப்பியடிக்கிறான் என்று மாணவன் கூறுவதும் வழக்கம். 

பிறகு ஆசிரியர் இருவரின் நோட்டையும் நோட்டமிட்டதில் இருவரும் ஒரே மாதிரி எழுதியிருந்தனர். காப்பியடித்த மாணவனிடம் ஆசிரியர் நீதான் காப்பியடித்துருக்கா, உண்மையை ஒற்றுக்கொள் என்றார். அதற்கு மாணவன் ஆசிரியரிடம் நீங்க நடத்துன வாய்ப்பாட நானும் சரியாக எழுதுயுள்ளேன். அவனும் சரியாக எழுதியுள்ளான், அப்ப ஒரே மாதிரி சரியாக எழுதியிருந்தால் காப்பியா, தவறாக எழுதியிருந்தால் அடிக்குறிங்க என்றான். அதற்கு ஆசிரியர் மூக்கில் கையைவைத்து திகைத்து நின்றார்.  

இதை பார்த்தால் உங்களுக்கு என்ன நியாபகம் வருது. உங்களுக்கு என்ன நியாபகம் வருவதுண்டு எனக்கு தெறியல..... ஆனால் எனக்கு ஒரு நியாபகம் வருது... செந்திலுக்கு பொண்ணு பார்க்க போகும் போது ரஜினியுடைய சட்டையை போட்டுட்டு போவாரு,,,  மக்கள் கேட்ப்பார்கள் இதுலயாரு மாப்பிள்ளை,,, அதற்கு ரஜினி சொல்லுவாரு மாப்பிள்ளை இவருதான் போட்டுருக்க சட்டை என்னுடையது தான் என்பார்.

பள்ளி பருவத்தில் நடைபெறும் சுவையான நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் பதியப்பட்ட கற்பனையான பதிவு இது.

இதுபோன்ற சுவையான நிகழ்வுகள் உங்களுக்கு நடந்திருந்தால் adiraipirai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.   

                                                                     ஆக்கம்: இர்ஷாத் அஹமது (அதிரைபிறை)

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)