புதிய இஸ்லாமிய நாடு உதயமாகிறது!!!

0

இராக்கில் அரசையும் ராணுவத்தையும் எதிர்த்துப் போராடி வரும் ஸன்னிப் பிரிவு சதாம் ஆதரவுப் போராளிகளான (ஐ எஸ் ஐ எஸ்) Islamic State of Iraq and the Levant (ISIS) , இராக் மற்றும் சிரிய பகுதிகளை இணைத்துப் புதிய நாடு ஒன்றை அறிவித்துள்ளன.

சிரியாவின் வடக்குப் பகுதியையும் இராக்கில் பெரும் பகுதியையும் கைப்பற்றியுள்ள ஐ எஸ் ஐ எஸ், அப்பகுதிகளை இணைத்துப் புதிய இஸ்லாமிய நாட்டை உருவாக்கியுள்ளன. அதன் முதல் ஆட்சித் தலைவராக கலீபாவாக- ஐ எஸ் ஐ எஸ் இயக்கத்தின் தலைவர் அபூபக்ர் அல் பக்தாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரே அமீருல் மூமினீன் - முஸ்லிம்களின் தலைவர் -என்றும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒலிநாடா அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்த ஐ எஸ் ஐ எஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் அபு முகமது அல் அதானி, உருவாக்கப்பட்டுள்ள தனி நாட்டுப்பகுதியில் வாழ்வோர் அனைவரும் புதிய கலீபாவிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கலீபாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கலீபாவின் அதிகார எல்லை விரிவாக்கப்பட்டு அவரது படைகள் வரும் போது அங்கு செயல்படும் மாநிலங்கள் , அமீரகங்கள் குழுக்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லாதவையாகிவிடும் என்றும் அல்அதானி கூறியுள்ளார்.

புதிய நாடு உருவானதால் இனி ஐஎஸ் ஐ எஸ் பெயரைப் பயன்படுத்தாமல் "இஸ்லாமிய நாடு" Islamic State என்று அவர்களது இயக்கம் அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். புதிய இஸ்லாமிய நாடும் கலீபாவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் உலகெங்குமிருந்து போராளிகள்
இப்பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்தி: இன்னேரம்.காம்



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)