25 இஸ்ரேல் ராணுவத்தினர் பலி !!!

1

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் போர் இன்று 14-வது நாளாக நீடிக்கிறது. பொதுமக்கள் பலியாவதைத் தடுக்க உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. மற்றும்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்
வலியுறுத்தியபோதும், சண்டை நின்றபாடில்லை. ஆக்ரோஷமான
தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல்
தற்போது தரைப்படை தாக்குதலை நடத்திவருகிறது.

ஹமாஸ் போராளிகளும்
இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருகின்றனர்.
இந்நிலையில்
இன்று தரைவழி தாக்குதலில் ஈடுபட்ட
இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ்
இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 7
வீரர்கள் பலியானதாக
அந்நாடு கூறியுள்ளது.
இஸ்ரேல் தரப்பில்
நேற்று வரை இருபது வீரர்கள் பலியான
நிலையில், தற்போது இந்த ஏழு பேருடன் சேர்த்து 27 பேர் பலியானதாக
கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. நாளை 23/07/14 காலை சென்னையில் இருந்து அதிரை செல்ல வாகனம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் கண்டிசன் 2 மேற்பட்டவர்களா நலம்

    ReplyDelete
Post a Comment