இணையத்தில் இலவசமாக பேசி கொள்ள உதவும் ஸ்கைப், செய்திகளை பரிமாறிக்கொள்ள உதவும் வாட்ஸ் அப் போன்றவைகளுக்கு சவுதியில் தடை வரும் என தெரிகிறது.
இது தொடர்பாக சவூதியின் தகவல் மற்றும்
தொலை தொடர்பு ஆணையம் சம்பந்தப்பட்ட இணைய சேவை நிறுவங்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இச்சேவை தொடர முடியாத பட்சத்தில் தடை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற
அப்ளிகேஷன்ஸ் காரணத்தால் சவூதியின் பாதுகாப்பிற்க்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால் தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஆனையம் கூறியுள்ளது.
2010ஆம் ஆண்டு ப்ளாக்பெர்ரி தொலைபேசி வழியாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை கண்காணிக்க முடியவில்லை என்றும் அதனால் தீவிரவாதத்திற்க்கு எதிரான தமது போரில் பின்னடைவு ஏற்படும் என்றும் கூறி ப்ளாக்பெர்ரி போன்களுக்கு சவூதியில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது