சென்னையில் பள்ளிவாசல் சுற்றுசுவர் இடிக்கப்பட்டதால் பரபரப்பு!

0
நேற்று 07.09.14 அன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள மஸ்ஜிதே ஹிதாயா என்னும் பள்ளிவாசலில் உள்ள சுற்று சுவரை சமுக விரோதிகள் சிலர் குடி போதையில் சேதப்படுத்தி உள்ளார்கள் , அங்கு இஸ்லாமியர்கள் மிக குறைந்த அளவிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்தவுடன் இரவு சுமார் 1.00 மணி அளவில் த மு மு க தென் சென்னை மாவட்ட தலைவர் கோரி மற்றும் செயலாளர் ஹனிபா மற்றும் மமக செயலாளர் ஜின்னா மற்றும் சைதை பகுதி கிளை நிர்வாகிகள் நேரில் சென்று காவல் துறையுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதன் விளைவாக 2 சமுக விரோதிகள் கைது செய்ய பட்டனர். இதில் ஒருவரை பொதுமக்கள் சேர்ந்து காவல் துறையிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.

இன்று அடையார் பள்ளியில் இது சம்பந்தமாக அலோசனை கூட்டம் நடைபெற்றது , இதில் இஸ்லாமிய  அமைப்புகளான SDPI, INTJ, PFI நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

அந்த சமயம் தகவல் அறிந்து த.மு.மு.க மாநில பொது செயலாளர் அப்துல் சமது அவர்களும் மசுரா வில் கலந்து கொண்டு ஆலோசனை கூறினார்கள்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)