அதிரை 8வது வார்டு கவுன்சிலராக அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார் சேனா மூனா ஹாஜா முஹைதீன்!

1

 தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதிவிகளுக்கு தேர்தலை சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆனையம் அறிவித்தது.

அதிரையை பொருத்தவரை 8வது வார்டு கவுன்சிலர் பதவி காலியாக இருந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த சமுக ஆர்வலர் சேனா மூனா எங்கின்ற ஹாஜா முஹைதீன் அவர்கள் அ.தி.மு.க சார்பாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் யாரும் முன்வராத காரணத்தினால் போட்டியின்றி இன்று அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் 8வது வார்டு கவுன்சிலராக பதவியேற்றார்.

அதற்க்கான அறிவிப்பு படிவத்தை அதிரை செயல் அலுவலர் அவர்கள் அ.தி.மு.க நிர்வாகிகள் முன்னிலையில் சேனா மூனா ஹாஜா முஹைதீன் அவர்களிடம் வழங்கினார்.

 

Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. வாழ்த்துக்கள் சகோதரரே தங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் இறைவனிடம் துஆ செய்கிறேன்.

    ReplyDelete
Post a Comment