முத்துப்பேட்டையில் தாக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக இரத்தம் தேவை !

0

முத்துப்பேட்டை அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்ட சிறுவன். துளசியாப்படிணம் அசாலின் மகன் அப்துல் ரஹுப் என்ற சிறுவனை தில்லைவிளாகத்தில் மர்மக்கும்பளால் தாக்கப்பட்டார் பலத்தகாயத்துடன் தஞ்சைக்கு அனுப்பப்பட்டார். நேற்று மதியம் முத்துப்பேட்டை செல்வதற்காக துளசியாப்படினத்தில் காத்துக்கிடக்கும் போது அவ்வழியாக ஒரு பைக் வந்நது. அந்த பைக்கில் லிப்ட் கேட்டு முத்துப்பேட்டையை நோக்கி வந்துக்கொண்டு இருந்தனர். தில்லைவிளாகம் வழியே வரும் பொழுது  மர்ம நபர்கள் அந்த சிறுவனையும் அந்த பைக்கில் வந்த நபரையும் கடுமையான முறையில் தாக்கிவுள்ளனர். இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.  முத்துப்பேட்டை அரசு மருத்துவமணையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சை மினாட்சி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அந்த சிறுவனுக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக “A-” ஏ நெகட்டிவ்“ இரத்தம் தேவைப்படுகிறது. இரத்தம் கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தஞ்சை மினாட்சி மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.
ph: 04362 226 474

மேலும் அப்துல் ரஹூப் என்ற மாணவனை கொலைவெறி தாக்குதல் நடத்திய 3 குற்றவாளியை முத்துப்பேட்டை காவல்துறை கைது செய்து உள்ளது. மற்ற குற்றவாளியை இன்று மாலை உள்ள கைது செய்வதாக காவல்துறை தெரிவித்தது.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)