அதிரை கரையூர் தெருவை சேர்ந்த தங்கராஜ் (வயது 68) இவர் இன்று மதியம் மாரியம்மன் கோவில் அர்ச் அருகில் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.அப்போது நாகப்பட்டினம் இருந்த அதிரை நோக்கி வந்த டெம்போ எதிபாராத விதமாக தங்கராசு மேல் மோதியது .இதில் தங்கராஜ் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார் .
இதன் பிறகு இறந்தவர் உடலை த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு அதிரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் அதிரை ஈ.சி.ஆர் சாலையில் நடந்த இந்த பயங்கர சாலை விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
புகைப்படம் : கண்ணன் (அதிரை வானவில்)
Advertisement




அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக மாறிவிட்டது எனவே ECR ரோடு என்பதை DEAD ZONE என பெரிய போர்டை வாகன ஓட்டிகளின் பார்வை படும்படி வைக்க வேண்டும்,
ReplyDelete