பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்காக (16 வயதுக்கு மேல்) சிறப்பு பாஸ்போர்ட் மேளா திருச்சி சாஸ்திரி ரோட்டில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருச்சி, கரூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பூர்த்தியான 10ம் வகுப்பு மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிலையங்கள் ஒத்துழைத்தால் இதுபோன்று மாதம் 2 முறை பாஸ்போர்ட் மேளா நடத்த தயாராக உள்ளோம். சிங்கப்பூரில் 2 நிமிடத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. ஏடிஎம் எந்திரம் போல உள்ள மெஷினில் கைரேகையை பதிவு செய்தால், 2 நிமிடத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும். இதை 10 பேர் கொண்ட குழுவினர் சென்று பார்த்து வந்துள்ளோம்.
இதற்கு போலீசாரின் ஒத்துழைப்பு மிக அவசியம். ஒருவர் பற்றிய குற்றத்தகவல்களை உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும். இந்தமுறை அமல் செய்யப்பட்டால் பாஸ்போர்ட் வழங்கும்போது போலீஸ் ‘வெரிபிகேசன்‘ தேவைப்படாது.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. போலீசார் ஒத்துழைத்தால் இத்திட்டம் விரைவில் சாத்தியப்படும். பாஸ்போர்ட் எடுக்கும் நேரம், காலம் மிச்சமாகும் என்றார்.

நன்றி :தினகரன்
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது