சவூதியில் ஐ போன், சாம்சங் போலவே விற்கப்படும் போலி ஸ்மார்ட் போன்கள்! எச்சரிக்கை!

0
ரியாத் நகரில் பத்தா என்னும் இடத்தில் உள்ள ஒரு சரக்கு குடோனில், சவூதி வர்த்தக அமைச்சக  அதிகாரிகள் சோதனையாளர்கள் 2,000 போலி ஸ்மார்ட் போன்களை பறிமுதல் செய்துள்ளார்கள்.

இந்த போலி ஸ்மார்ட் போன்கள் பிரபல “iPhone” and “Samsung Galaxy” என்ற பெயரில் கச்சிதமாக பேக் செய்து, ஏமாற்றி விற்பனை செய்வதற்கு, தயாராக இருந்த நிலையில் இவைகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

அத்துடன் சோதனையின் போது பிரபல கம்பெனிகளின் பெயரில் (குறிப்பாக ஸ்மார்ட் போன்கள்) 7000 போலி மோபைல் சார்ஜர்களும் கண்டு பிடிக்கப் பட்டு பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

சவூதி வர்த்தக அமைச்சகம் மேற்கொண்டு இது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.

எனவே புதிய மொபைல் போன்கள் வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்கவும். போலிகளில் ஏமாற வேண்டாம்.

நன்றி : தி.ரஹ்மத்துல்லா
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)