திருச்சி பொதுக் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் ஜி.கே.வாசன்!

0

திருச்சியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்று அறிவித்தார் ஜி.கே. வாசன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த மூப்பனாரால் உருவாக்கப்பட்டது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. இது மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியோடு இணைந்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்ற பெயர் மறைந்து போனது.
தற்போது, அதே பெயரை மூப்பனாரின் மகன் ஜி.கே. வாசன் தனது புதிய கட்சிக்கு சூட்டியுள்ளார்.
மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன், தான் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை திருச்சியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். கூட்டத்துக்கு 20 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் வந்திருந்தனர்.
மேடையின் வலதுபுறத்தில் வளமான தமிழகம் என்ற வாசகத்துடன் புனித ஜார்ஜ் கோட்டை படமும், இடதுபுறத்தில் வலிமையான இந்தியா என்ற வாசகத்துடன் செங்கோட்டை படமும் வைக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பு, நாடாளுமன்ற வடிவத்தைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மழை பெய்தாலும் மேடைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வண்ண விளக்குகளைக் கொண்ட தோரணங்களும் ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கின்றன.
கூட்ட அரங்கின் கடைசிப் பகுதியில் அமர்ந்திருப்பவரும் பொதுக்கூட்ட நிகழ்வை தெளிவாகப் பார்க்கும் வகையில், ஆங்காங்கே பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த கூட்டத்திற்கு அதிரையில் இருந்து ஜி.கே. வாசன் ஆதரவாளர்கள்   13 வேன்களில் 500க்கும் மேற்பட்டோர் திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர் .


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)