அதிரையில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்! (படங்கள் இணைப்பு)

0


அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் ,கோவை சங்கரா மருத்துவமனை மற்றும் தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது .

 இந்த முகாமை அதிரை பேரூராட்சி துணைத் தலைவர் பிச்சை அவர்கள் துவக்கி வைத்தார் .இந்த முகாமில் அதிரை மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களில் இருந்து 175 பேர் கலந்து பயன் அடைந்தனர் .மேலும் 30 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அழைத்து சென்று உள்ளனர் .

இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் Rtn.G.கஜேந்திரன் (தலைவர்),Rtn.N.அபுதாஹிர் (செயலாளர்),Rtn.M.A.முகமது தமீம் (பொருளாளர்) ,ஹாஜா பகுருதீன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர் . 














செய்தி மற்றும் படங்கள்: காலித் அஹமது (அதிரை பிறை)

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)