முத்துப்பேட்டை தர்கா சேதமாக்கப்பட்ட வழக்கில் 10 பேர் கைது. 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் தர்கா மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த அய்யாத்துரை பாண்டியன்(25), யோகேந்திரன்(22), திலிபன்(22), பாலசுப்பிரமணியன்(28), ஆலங்காடு பாலமுருகன்(25), சின்னாங்கொள்ளை சந்திரன்(22), தம்பிக்கோட்டை அமுதன்(22) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி சிறையில் அடைத்தனர். மேலும் ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து(19), பெரியசாமி(19), கோசாக்குளத்தெரு பிரவின்ராஜ்(19) ஆகிய மூவரை கைது செய்து தஞ்சாவூர் சிறுவர் சீர்த்திருத்த சிறைக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பல பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இந்த கலவரம் தெடாடர்பாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முத்துப்பேட்டை நகர் மற்றும் ஜாம்புவானோடை தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 தினங்களாக தஞ்சாவூர் எஸ்.பி.தர்மராஜ் திருவாரூர் ஏ.டி.எஸ்.பி.அன்னார்கலி பேகம் ஆகியோரது தலைமையில் போலீசார் தீவிர பாhதுகாப்பு பணயில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது