அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்
தேதி: 09/01/2015
நேரம்:மாலை5.30PM
இடம்: ரியாத் ( ஹாரா )
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 19 வது மாதாந்திர கூட்டம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. நெய்னா முகமது(கொள்கை பரப்பு செயலாளர்)
முன்னிலை : சகோ. A.சரபுதீன் (தலைவர் )
வரவேற்புரை : சகோ.அகமது ஹாஜா (இணை பொருளாளர் )
சிறப்புரை : சகோ. அபூபக்கர்(பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
நன்றியுரை : சகோ. A.சாதிக் அகமது (இணை தலைவர்)
தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக 3 தையல் மிஷின் வழங்குவதென முடிவு செய்யபட்டு அதன் பிரகாரம் கடந்த மாதம் (DECEMBER) ஒரு மிஷினும், இந்த மாதம் (JANUARY) இரண்டு மிஷினுக்கான தொகையை தலைமையகத்துக்கு அனுப்பி கொடுக்கப்பட்டது. இதற்காக உதவி செய்தவர்களுக்காக துவா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது .
2) வார நகைக்கடன் தவனை முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்தை மேலும் சிறப்பான முறையில் கெடு முடிந்தவுடன் வசூலிப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கப்பட்டது.
3) கல்வி கடன் பெற தகுதியிருந்தும் கேட்டு பெற தயக்கத்துடன் உள்ளவர்களை கண்டறிந்து உதவி செய்வது சம்பந்தமாக முடிவு செய்யப்பட்டது.
4) மேலும் ABM ரியாத் கிளையின் சார்பாக ஒரு தனிப்பட்ட நபரின் உதவியை கொண்டு நமதூரை சார்ந்த ஜனாப். ஜெய்னுதீன் கடற்கரை தெரு அவர்கள் கடந்த 3 மாதம் காலமாக நோய்வாய்பட்டு பொருளாதார உதவியை நாடிய வகையில் அதற்கான இந்த நபரின் மருத்துவ செலவை ரியாத்திலிருந்து அனுப்பி கொடுக்கப்பட்டது. இந்த உதவி செய்தவர்களுக்காக துவா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது .
5) நடந்து முடிந்த இக்கூட்டத்திற்கு புதிய, பழய உறுப்பினர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது வந்து மிகவும் சிறப்பித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 13-ம் தேதி FEBRUARY 2015 ஹாராவில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது