தமிழ்நாடு கால்பந்து கழகம், தஞ்சாவூர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து லீக் தொடர் போட்டியின் முதல் ஆட்டம் இன்று மாலை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளியில் துவங்கியது.இதை திரு.N.R.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்),திரு S.R.ஜவகர்பாபு (பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர்) ஆகியோர் துவங்கி வைத்தனர் .
முன்னதாக திரு M.K.சிவனாந்தம் (தலைவர்,தஞ்சை கால்பந்து கழகம்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .மேலும் இதில் திரு M.கோவிந்தராசு (தலைமையாசிரியர் அ.ஆ.மேல்நிலை பள்ளி,பட்டுக்கோட்டை),திரு S.மயில்வாகணன் (நகர் மன்ற உறுப்பினர்,),நல்லாசிரியர் திரு N.கோபால கிருஷ்ணன் (துணை தலைவர், தஞ்சை கால்பந்து கழகம்),திரு M.A.முகமது தமீம் (துணை தலைவர் ,தஞ்சை கால்பந்து கழகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும் vs பட்டுக்கோட்டை AVK FC அணியினர் மோதினர் .இதில் அதிரை AFFA அணியை சேர்ந்த அஸ்ரப் 1 கோல்களும், சபானுதீன் 1 கோலும் அடித்து தனது அணி வெற்றிபெற உதவியாக இருந்தனர்.ஆட்ட இறுதியில் 2-0 என்ற கணக்கில் அதிரை AFFA அணி வெற்றிபெற்றனர்.




செய்தி மற்றும் புகைப்படம்:
காலித் அஹ்மத்
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது