அதிரையில்
ADAM INSTITUTE OF EDUCATION AND TECHNOLOGY என்ற குறுகியகால செய்முறை பயிற்சி மையம்
நமதூர் நடுத்தெருவில் அமைந்துள்ள பைத்துல்மால் முதல் மாடியில் துவங்கப்பட்டுள்ளது.
அதிரையரால் துவங்கப்பட்டுள்ள AIET என்ற இந்த பயிற்சி மையத்தில் 18 விதமான குறுகிய கால
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
பல இளைஞர்கள்
படித்து வேலையின்றி உள்ளனர். இவர்களுக்கு எந்த பயிற்சி கற்றால் நல்ல வேலை
கிடைக்குமோ அந்த பயிற்சியை வழங்கி அதில் வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஆலோசனைகளும் இப்பயிற்சி
மையத்தில் வழங்கப்படும். அதுபோல் சிலர் படிக்காமல் தனி தொழில் துவங்க திறமை குறைவாக உள்ளனர். இவர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட பிரிவில் பயிற்சி அளித்து அவர்களுக்கென
ஒரு தனி திறமையை வளர்க்க வேண்டும் என்பதே இப்பயிற்சி மையத்தின் நோக்கம்.
கம்பியூட்டர் அடிப்படை
பயிற்சி, ஹார்ட்வேர் பயிற்சி, எலக்ட்ரானிக் பயிற்சி, எலெக்ட்ரிக்கல்ஸ் பயிற்சி, ஆங்கில
மொழிப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை கற்க பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் என்று செல்லும்
மாணவர்களுக்கு உள்ளூரிலேயே கல்வி கற்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
மேலும் இப்பயிற்சி
மையத்தில் கற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் மிகவும் பயன் தரக்கூடிய
சான்றிதலும் வழங்கப்படும். இங்கு பயிற்சி பெறுகளுக்கு இறுதியில் ப்ராஜெக்ட்
செய்வதற்க்கான பயிற்சிகளும் சேர்த்து வழங்கப்படுகிறது.
சிறு குறிப்புகள்:
- ·இப்பயிற்சி மையத்தில் 12 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இணையலாம்.
- ·வெளியூரில் கல்வி கற்கும் மாணவ மாணவிகள் வார விடுமுறைகளில் பயிற்சி பெறலாம்.
- ·அதிரைக்கு சுற்று வட்டாரங்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கு ஏற்றவாறும் நேரம் ஒதுக்கி பயிற்சி வழங்கப்படும்.
- · முழுக்க முழுக்க செய்முறை பயிற்சி.
- · தனி ப்ராஜெக்ட் செய்வதற்கு பயிற்சி வழங்கப்படும்.
- · கணினி பெரியதிறையில் பயிற்சிகள் வழங்கப்படும்.
- · மாணவர்கள் வசதியான நேரங்களில் பயிற்சிகள் வழங்கப்படும்.
- ·அர்பணிப்புணர்வுடன் பயிற்சியளிக்கும் திறமையான பயிற்சியாளர்கள்.
- · அழகான அருமையான பயிற்சி அரை.
- · அமைதியான சுற்றுபுறம்.
பயிற்சி பிரிவுகள்
விபரம் கீழே…
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது