பிரம்மாண்டத்திற்கும், நம்மை அதிசயிக்க வைக்கும் ஆச்சரியங்களுக்கும் பெயர் போன நகரம் துபாய் ஆகும். அதிலும் கடந்த சில வருடங்களில் மட்டும் கட்டிடக்கலையில் இதன் அதிவேக வளர்ச்சி அனைவரையும் பிரமிக்கவே வைத்திருக்கிறது. செயற்கையாக உருவாக்கப்பட்ட பாம் தீவுகள், உலகத்தின் மிக உயரமான கட்டிடம் என பட்டியல் நீண்டு கொண்டே தான் போகும். அதே போன்று எதிர்காலத்தில் துபாயில் உலகிலுள்ள சில முக்கியமான நகரங்களை போன்று 'ஹார்ட் ஆப் யுரோப்' என்ற செயற்கை தீவுகள் உருவாக்க Kleindienst க்லே இண்டீனிஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் பனி பொழியக்கூடய பகுதிகளான ஆஸ்டிரியா, மொனாக்கோ, ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்விசர்லாந்து மற்றும் செண்ட்.பீடர்ஸ்பர்க் பகுதிகளைப் போன்ற செயற்கை நகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பாலைவன மணலில் எப்படி சாத்தியம் என்பதற்கு க்லேஇண்டீனிஸ்ட் குழு விளக்கமளித்துள்ளது.
ஒவ்வொரு நகரமும் முகடாக அமைக்கப்படவுள்ளது. இதில் தொழில் நுட்பத்தின் உதவியைக் கொண்டு செயற்கையாக பனிவிழும் வகையில் அமைக்கப்பட உள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த திட்டத்தில் பூமிக்கு அடியில் குளிரூட்டபட்ட குழாய்கள் அமைத்து, மேலிருந்து விழும் பனி உடனே உருகிவிடாமளும், நீண்ட நேரம் அப்படியே இருக்கவும் வழிவகை செய்யப்பட்டு இயற்கையை போன்று ஐரோப்பிய நகரங்களில் நாம் இருப்பது போன்ற ஒரு சூழலை உருவாக்கும் என இதனை செயல்படுத்த உள்ள க்லேஇண்டீனிஸ்ட் குழு தெறிவித்துள்ளது.
அதேபோல வல்லுனர்கள் பலர் துபாய் போன்ற வெப்பமிகு வளைகுடா பகுதிகளில் இது போன்ற திட்டங்கள் சாத்தியமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆனால் க்லேஇண்டீனிஸ்ட் குழுவின் முதன்மை நிர்வாக அதிகாரி ஜோசப் க்லேஇண்டீனிஸ்ட் குறிப்பிடுகையில், இது நிச்சயமாக சாத்தியம், ஏனெனில் இது போன்ற தொழில்நுட்பம் உலகில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது எனினும் இதுபோன்ற ஒரு முழுவதுமாக வெளிப்புறத்தில் கட்டமைப்பது என்பது இதுவே முதல் முறை. மேலும் இந்த திட்டத்தை செயல் படுத்த சாதரணமாக ஒரு ஷாப்பிங்மாலுக்கு எந்த அளவிலான மின்சாரம் தேவப்படுமே அதே அளவிலான மின்சாரம் போதுமானது, இந்த திட்டத்திற்கு நாங்கள் சுற்றுச்சூழக்கு கேடு விளைவிக்காத திட்டம் எனற சான்றிதழ் பெறும் அளவில் வடிவமைக்கப்படும் எனவும் அனைத்து அனுமதிகளும் முறையாக பெறப்பட்டு 2016ல் இந்நகரம் தயாராக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது