இஸ்லாத்திற்கு மாறிய ஜெர்மனி கால்பந்தாட்ட வீரர்!

0

ஜெர்மனி நாட்டின் க்ளப் கால்பந்து அணிகளில் ஒன்றான FC Nürnberg அணியில் விளையாடி வருபவர் டேனி ப்ளம். 24 வயதான இவர் இந்த அணியில் விளையாடி வந்தார். இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் இவருக்கு 6 மாதங்கள் ஓய்வு வழங்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

அப்போதுதான் இவருக்கு மறுமை பற்றிய சிந்தனையும், நம் வாழ்க்கைக்கு பிறகு என்ன நடக்கும் என்ற சிந்தனையும் வந்துள்ளது. அடுத்த கணமே இவரின் மனதில் தோன்றியது இஸ்லாம். உடனே அருகில் உள்ள பள்ளிவாயிலுக்கு சென்றவர் அங்கு தான் நாடிய ஏதோ ஒன்று அவருக்கு கிடைத்த திருப்தி. இந்த மார்க்கம் குறித்து மேலும் பலவற்றை அறிய விருப்பப்பட்டு தினமும் பள்ளி வாசலுக்கு சென்றவர் முழுமையாக இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறி ஐ வேலை தொழுகையை நிறைவேற்றி வருகிறார்.

பிறவி கிருஸ்தவரான இவரது பெற்றோர்களிடம் இது குறித்து எடுத்து கூறியுள்ளதாகவும் விரைவில் அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறினார். "அல்லாஹ் இவருடைய பெற்றோர்களுக்கு ஹிதாயத்தை வழங்குவானாக"

-நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)