துபையில் போக்குவரத்தை நிறுத்திய பூனைக்குட்டி!

0


பொதுவாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்திணருகின்ற மாநகரம் துபை. அதிலும் நேற்று பரபரப்பான வியாழன் இரவுடன் தற்போது துபையில் நடைபெற்று வரும் 'வர்த்தக திருவிழா' கூட்டமும் கூடுதலாக இணைந்து கொள்ள துபை சாலைகளில் போக்குவரத்தின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.





நேற்றிரவு சுமார் 10.15 மணியளவில், மிகவும் பரபரப்பாக காணப்பட்ட நைஃப் சிக்னலில் தான் குட்டிப்பூனை ஒன்று புகுந்து போக்குவரத்தை களேபரப்படுத்தியது. சிக்னலில் நின்று கொண்டிருந்த கார்களுக்கடியில் புகுந்து பயத்தில் அங்குமிங்கும் ஓடிய பூனைக்குட்டியை காப்பதற்காக போக்குவரத்து போலீஸார் முதல் பாதசாரிகள் வரை அதனுடன் ஒரு போராடி பிடித்து வெளியே விட அது மீண்டும் பழையபடி வாகனங்களுக்கு அடியில் சென்றது.

இந்த குட்டிப்பூனையை வாகனங்களில் அடிபடாமல் காக்கும் போராட்டத்தால் நைஃப் போலீஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்ததும், வாகன ஓட்டிகள் பொறுமையாக பூனைக்குட்டி மீண்டும் பிடிபடும் வரை பொறுமையுடன் காத்திருந்து சென்றதும் சிலிர்ப்பான சம்பவமாக அமைந்தது.

ஒருவழியாக பூனைக்குட்டியை பிடித்து விட்டாலும் அந்த பூனைக்குட்டியை படம் புடிக்க முடியலியே என்ற ஆதங்கத்துடன்...

-மதினாப்பா பேரன்

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)