மறைந்த வள்ளல் BSA KAKA அவர்களுக்கு என் கவிதாஞ்சலி!

0


இந்த இணைப்பில் இருக்கும் “இனிய திசைகள்” மாத இதழில் 6 ஆம் பக்கம் அன்னார்க்கு யான் யாத்தளித்த கவிதாஞ்சலிக் கவிதை இடம்பெற்றுள்ளது:

இதோ அந்தக் கவிதை:

அமரர் பி.எஸ்.ஏ காக்கா அவர்களுக்கான இரங்கற்பா

ஆயிர மாயிரம் பேர்கள்
    ஆதர வாயினர் உம்மால்
தாயினைப் போலவே அன்பால்
    தாங்கியே சென்றவுன் பண்பால்
வாயிலில் வந்தது செல்வம்
    வாழ்வினைப் பெற்றனர் எங்கும்
நோயினால் சென்றதுன் மெய்தான்
    நொடியினில் துன்பமும் பெற்றே!


காலமும் நேரமும் வந்தால்
      காத்திருக் காமலே செல்லும்
கோலமும் உண்டென உண்மை
      கோள்களை ஆள்பவன் செய்தான்
பாலமாய் நின்றவுன் பாதை
       பற்றியே செல்வது எங்கள்
வேலையாய் ஆனது என்பேன்
   வேதனை மனத்தினில் நின்றே!


பேறுடன் சென்றது மெய்யே
     பேறுகள் உண்டென கண்டேன்
ஆறுதல் சொல்வது உன்றன்
    ஆருயிர் சொர்க்கமும் காண
மாறுதல் தானென நம்பி
    மாறிடும் துன்பமும் மெல்ல
வேறிடம் மாற்றிய தேவன்
    வெற்றியைக் காட்டுவான் ஆங்கே!

-- யாத்தனுப்பியவர்: அதிரை கவியன்பன் கலாம், அபுதபி

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)