DR.PIRAI-அடிக்கடி தலைசுற்றலா! இதோ உங்களுக்கு டிப்ஸ்!

0

அடிக்கடி பித்தம் தலைசுற்றல் மற்றும் தோல் வியாதிகள் வருபவர்களுக்கு நிரந்தர குணம் தெரிவதற்கு கொத்தமல்லி விதை (தனியா) பச்சையாக ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் இந்த உடைத்த தனியாவை ஒரு கை அள்ளி, கொதித்த வென்னீரில் போட்டு மூடி வைக்கவும்.

தேவையானால் சிறிது நேரம் கொதிக்க வைக்கலாம். பிறகு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். உடலில் கெட்ட நீர் பிரிந்து ரத்தம் சுத்தமாகும். கொத்தமல்லி கசகசா பருத்தி விதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வென்னீரில் கலந்து குடிக்க, தலைச்சுற்று, கிறுகிறுப்பு நீங்கும். 

அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்தஅழுத்தம் இருப்பதாக அர்த்தம். முற்றிய இஞ்சியை நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள். தலைச்சுற்றும் நிற்கும். பிளட் பிரஷரும் குறையும். 

வெண்தாமரைப்பூவின் இதழ்களைத் தூளாக்கி காப்பி டிகாக்சனைப்போல் தயாரித்து பாலில் ஊற்றிச் சாப்பிட்டால் - தலைச்சுற்றல், கிறுகிறுப்பு. குணமாகும்.  

50 கிராம் சீரகத்தில் 2 ஸ்பூன் உப்பு, சிறிதளவு பெருங்காயம், ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் சேர்த்து ஒரு நாள் ஊறவைத்து அடுத்த நாள் வெயிலில் நன்றாகக் காயவைத்து ஒரு பாட்ழலில் வைத்துக் கொண்டு தலைச்சுற்றல் வயிற்றுப்பொறுமல் பசியின்மைக்கு இதில் அரை ஸ்பூன் சீரகத்தை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. 

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)