அவசரத்திற்க்கு உதவாத அதிரை ஸ்டேட் வங்கி ATM!

Editorial
0

அதிரை ஸ்டேட் வங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நமதூரில் துவங்கப்பட்டு துரித மற்றும் நல்ல சேவையால் குறுகிய காலத்தில் பல அதிரையர்களை வாடிக்கையாளர்களாக ஈர்த்துள்ளது. இதனால் நமதூர் மக்கள் விரும்பி கணக்கு துவங்கும் வங்கியாக இந்த வங்கி உள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் தற்போதைய நவீன காலத்தில் கால் கடுக்க காசோலை எழுதி பணம் பெறுவது அரிதிலும் அரியதாகி விட்டது. எனவே பணம் எடுக்க நினைப்பவர்களின் அடுத்த சாய்ஸ் ATM. கார்டை சொருகி ரகிசிய எண்ணை அடித்து எவ்வளவு பணம் என்று சொன்னால் போதும் அடுத்த நிமிடன் பணம் நமது கையில்.

இப்படி எளிமையான முறையில் பணம் எடுக்க முடிவதால் பலரும் ATM ஐ நாடி செல்கின்றனர். இப்படி இருக்க நமதூர் ஸ்டேட் வங்கியில் ATM மையம் திறந்திருப்பது அபூர்வமாக உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில் பணம் பதிவர்தனை நடைபெறும் அதிரையில் இந்த நிலை தொடர்வதால் அதிரை ஸ்டேட் வங்கியின் மீது மக்களின் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)