பட்டா மாறுதலுக்கு வருவாய்த்துறைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

0

"பத்திரப்பதிவின் போது நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் செய்ய வருவாய் துறைக்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை" என உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக இருப்பவர் பரமசிவம். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், "தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் சொத்து உரிமை மாற்றம் தொடர்பாகப் பதிவு செய்யும் போது, நிலத்தை அளவீடு செய்யவும், நிலத்தை வாங்குபவர் பெயரில் பட்டா மாறுதல் செய்யவும் உரிய கட்டணம் செலுத்தப்படுகிறது.

ஆனால் மேற்கண்ட இரு பணிகள் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலகங்களை அணுகும் போது அவற்றுக்குத் தனியாக கட்டணம் செலுத்துமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். 

இதனால் ஒரே பணிக்கு 2 முறை கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. எனவே, இந்த நடைமுறையை ரத்து செய்து, கட்டணம் வசூல் செய்யாமல் நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் செய்து தர வருவாய்த்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல் மற்றும் நீதிபதி எஸ். தமிழ்வாணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு, பத்திரப் பதிவுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பட்டா மாறுதல் பெற வருவாய்த்துறை அலுவலகத்தில் தனியாக கட்டணம் செலுத்தத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், "பத்திரப்பதிவின் போது நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் செய்வதற்கான கட்டணத்தை சார்பதிவாளர்களிடம் செலுத்துவதே போதுமானது என்றும், இந்த சேவைகளுக்காக வருவாய்த்துறை அலுவலங்களில் தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது" என்றும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தனர்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)