அதிரை மக்களுக்கு பயன்படும் திருவாரூர்-காரைக்குடி ரயில் திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் கோரிக்கை!

0
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

காரைக்குடி - சென்னை வழித்தடம் தமிழகத்தின் 120 ஆண்டுகளுக்கு மேலான மிகவும் பழமையான ரயில் பாதையாகும். இந்த வழித்தடம், சென்னையில் இருந்து செங்கல்பட்டு, - விழுப்புரம், மயிலாடுதுறை - திருவாரூர் என மூன்று கட்டங்ளாக அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில் சேவை நடைபெற்று வருகிறது.

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை - அதிராம்பட்டினம் -பட்டுக்கோட்டை - பேராவூரணி - அறந்தாங்கி - காரைக்குடி வரையிலான 148 கி.மீ. தொலைவு உள்ள மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற பல முறை நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்திலும், 377-வது விதியின் படியும் பேசியதன் விளைவாக முதல் கட்டமாக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க. ஆட்சியில் கடந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது இப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது தமிழக முதல்வர் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து புணிளை விரைந்து முடிக்க வேண்டுமென எழுதி உள்ள கடிதத்தில் இந்த திட்டம் பற்றி குறிப்பிடப்படாதது இப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, தமிழக முதல்வர் மத்திய அரசிடம் இத்திட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி இந்த திட்டத்த்துக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)