பட்டுக்கோட்டையில் போலி IND நம்பர் பிளேட் தயாரித்த இருவர் உட்பட ஏழு பேர் கைது

Irshad Bin Jahaber Ali
0

தஞ்சை மாவட்டத்தில்  போலி IND நம்பர் பிளேட் விற்பனையில் ஈடுபட்ட ஒன்பது பேரை போலீஸார் கைதுசெய்து உள்ளனர். தமிழகம் முழுவதுமாக, அரசு அறிவிப்பு இல்லாத நிலையில், வாகன போக்குவரத்து சட்டத்தை மீறி, போலி IND நம்பர் பிளேட் பொருத்தி, வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

தஞ்சை  மாவட்டத்தில், போலி IND  நம்பர் பிளேட்டு பொருத்திய வாகனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என SP தர்மராஜன் உத்தரவிட்ட பிறகும், இதுபோன்ற வாகனங்கள் மீதும், போலி ஸ்டிக்கர் தயாரித்து வழங்கிய ஸ்டிக்கர் கடைக்கார்கள் மீது, போலீஸார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SP உத்தரவின் பேரில், மாவட்ட முழுவதுமாக ஸ்டிக்கர் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் போலீஸார் ரெய்டு நடத்தியதில், தஞ்சையில் பழைய ஹவுசிங் யூனிட் பகுதியிலுள்ள அன்னை ஸ்டிக்கர்ஸ் உரிமையளார் வாகுலேயன் என்பவரை, தஞ்சை போலீஸார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை அறந்தாங்கி மெயின் ரோட்டில் உள்ள ஸ்டிக்கர் கடைகளில் பட்டுக்கோட்டை டவுன் போலீஸார் சோதனையிட்டனர். விஸ்வ ஸ்டிக்கர்ஸ் உரிமையாளர் சேர்ந்த ராஜ்குமார், ஆல் இண்டியன் ஸ்டிக்கர்ஸ் உரிமையாளர் விஜயராகவன் ஆகியோரை, போலி IND நம்பர் பிளேட் தயாரித்து, விற்பனை செயரில் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல, கும்பகோணம் காசி விஸ்வநாதார் வடக்கு வீதி உள்ள கே.கே., ஸ்டிக்கர்ஸ் உரிமையாளர் சாமிநாதன், மேலாக்காவிரியிலுள்ள மெகா ஸ்டிக்கர்ஸ் உரிமையாளர் மணிகண்டன் மற்றும் ராஜாஸ் ஸ்டிக்கர்ஸ் உரிமையாளர் ஜெயபால் ஆகியோரை, போலீஸார் கைதுசெய்தனர்.  

மாவட்டம் முழுவதுமாக, போலி நம்பர் பிளேட் தயாரித்து, விற்பனை செய்த, ஒன்பது பேரை போலீஸார் கைதுசெய்து உள்ளனர். 

அதிரையிலும் இதைபோன்று போலி IND நம்பர் பிளேட்டை விற்பனை செய்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)