மீண்டும் புத்துணர்ச்சி பெரும் அதிரை மேலத்தெரு மைதானம்!(படங்கள் இணைப்பு)

Unknown
0


அதிரை மேலத்தெரு மைதானம் கடந்த சில மாதங்களாக செடிகள் மண்டியும் பொலிவிழந்த நிலையில் காட்சியளித்தது.இதனையடுத்து கடந்த (21-12-2014) அன்று அமைப்பின் ஒரு அறிவிப்பை அதிரை வலைதளங்களில் பதிவிட்டோம் . அந்த அறிவிப்பு இதோ உங்கள் பார்வைக்கு 

17.12.2014 அன்று அதிரைநியூஸ் வலைதளத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் மேலத்தெரு மைதானம் என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் பதிவு செய்ததை நான் பார்த்தேன், எனது வேலை பழுவின் காரணத்தால் என்னால் உடன் பதில் கொடுக்க முடியவில்லை இந்த மைதான விஷயத்தில் மேலத்தெருவாசிகள் அனைவருக்கும் பொறுப்புண்டு என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

இந்த மைதானம் செடிகளால் மண்டிக்காணப்படுவது அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பெரும் வருத்தமும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மைதான்.

அந்த வரிசையில் கடந்த 10 தினங்களுக்கு முன் இது விஷயமாக ஊரிலிருந்து காதர் என்கின்ற  சகோதரர் என்னை தொடர்பு கொண்டார் நான்  உடன் தாயக TIYA நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினேன் மழை விட்டு விட்டு பெய்ந்து கொண்டுள்ளதால் ஒன்றும் செய்ய முடியவில்லை மழை நின்றது விரைவில் அதை சரி செய்யலாமென்று கூறியுள்ளனர். எனவே, இது விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்திகொண்டுதான் உள்ளோம் என்ற தகவலை அறியத் தருகின்றோம்.

இன்ஷா அல்லாஹ்  மழை விட்ட ஒரு வார காலத்திற்குள்  இது விஷயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று கூறப்பட்டு இருந்தது .

இதனை தொடர்ந்து இன்று (03-03-2015) காலை முதல் மேலத்தெரு மைதானம் TIYA அமைப்பின் சார்ப்பாக JCB இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டும் , செடிகள் அகற்றப்பட்டு வருகிறது .இதனால் அந்த பகுதி இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர் .







Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)