பஜாஜ்-ன் முதல் ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக்காக, விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது பல்ஸர் RS200. வெளிநாடுகளில் பல்ஸர் 200SS என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பைக்தான் இங்கு RS200 என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. பல்ஸர் RS200 பைக்குக்கான டீஸர் படங்களையும் நேற்று வெளியிட்டது பஜாஜ்.
'Fastest Pulsar Yet' என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது புதிய பல்ஸர் RS200. இதனால், 200NS பைக்கில் இருந்த அதே 199.5 சிசி (23.20 hp) இன்ஜின் இருந்தாலும், இந்த பைக்கில் அதிக சக்தியைத்தரும் என எதிர்பார்க்கலாம். டூயல் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED டேடைம் ரன்னிங் லைட்ஸ், LED டெயில் லைட்ஸ் போன்றவை உள்ளன.
சில டீலர்கள் பைக்கின் புக்கிங்கை துவக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், பஜாஜ் இன்னும் அதிகாரப்பூர்வமாக புக்கிங்கை துவக்கவில்லை. பல்ஸர் RS200 பைக் சுமார் 1.4 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது