ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதார் அட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அடையாள அட்டை பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் 3.3.2015-ஆம் தேதி முதல் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை விடுபட்டோர் பட்டியலில் 7,86,089 பேர் உள்ளனர். இவற்றில் 43,132 நபர்களின் கைரேகைப் பதிவு மற்றும் உடற்கூறு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும், அவர்களுடைய வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரோடு ஆதார் அடையாள அட்டை எண், தொலைபேசி, செல்போன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்ட அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்திலும் நடைபெற்று வருகின்றன. 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதார் அடையாள அட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், துணை ஆட்சியர் ஜனனி செüந்தர்யா, தஞ்சாவூர் வட்டாட்சியர் சுரேஷ், தேர்தல் வட்டாட்சியர் முருகவேல் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது