7 கண்டங்களிலும் மலை ஏறிய சாதனையாளர் மல்லி மஸ்தான் பாபு ஆண்டிஸ் மலைத் தொடரில் மரணம்!

0


7 கண்டங்களிலும் உள்ள முக்கிய மலைகளில் மலையேறி சாதனை படைத்தவரான இந்தியாவின் மல்லி மஸ்தான் பாபு என்ற மலையேற்ற வீரர் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடரில் உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த மல்லி மஸ்தான் பாபு உலகப் புகழ் பெற்ற மலையேற்ற வீரர்களில் ஒருவர். இவரது வேலையே மலையேற்றம்தான். ஏதாவது ஒரு மலையில் ஏறியபடி இருப்பது இவரது பொழுதுபோக்காகும்.

உலகின் 7 கண்டங்களிலும் உள்ள முக்கிய மலைகள் அனைத்திலும் ஏறி சாதனை படைத்தவர். இதற்காக அவரை 7 சம்மிட்டீர் என்று செல்லமாக அழைப்பார்கள். அதையும் குறுகிய காலத்தில் 7 கண்ட முக்கிய மலைகளில் ஏறிய சாதனையும் இவருக்கே உள்ளது. இந்த நிலையில் தென் அமெரிக்காவின் முக்கியமான மலைத் தொடரான ஆண்டிஸ் மலைத் தொடரில் ஏறுவதற்காக சென்றிருந்தார் பாபு. அர்ஜென்டினா - சிலி இடையிலான மலைப் பகுதியில் அவர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மார்ச் 24ம் தேதி முதல் அவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவரைத் தேடும் பணியில் அர்ஜென்டினா, சிலியிலிருந்து ஹெலிகாப்டர்கள் விரைந்து வந்தன. தீவிர தேடுதல் பணியின் இறுதியில் தற்போது பிணமான நிலையில் பாபுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து பாபுவின் சகோதரியான டாக்டர் மல்லி தொரசனம்மா கூறுகையில், நண்பர்களுடன்தான் பாபு மலையேறப் போயிருந்தார். வழியில் அவர் தவறி விட்டார். 24ம் தேதி முதல் அவரைக் காணவில்லை. இதையடுத்து தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அப்பகுதியில் கடும் மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்புப் பணி கடும் பாதிப்பை சந்தித்தது. தற்போது அவரது உடலைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அங்கு கன மழை பெய்து வருவதால் உடலை மீட்க முடியாத அளவுக்கு நிலைமை சிக்கலாக உள்ளது என்றார். கடந்த 2006ம் ஆண்டு 172 நாட்களில் உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள முக்கிய மலைகளில் ஏறி சாதனை படைத்த பாபு தற்போது உலகின் புகழ் பெற்ற மலை ஒன்றில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பாபு, ஐஐடி காரக்பூரில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)