காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற ஆண்டு விழா இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் டாக்டர்.A.ஜலால் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள்.வந்து இருந்த அனைவரையும் வரவேற்கும் விதமாக காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கில துறை மாணவர் P.ராம்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.
இதனையடுத்து காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கில துறை தலைவர் டாக்டர்.A.முகம்மது முகைதீன் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் டாக்டர்.T.மார்க்ஸ் (PROFESSOR OF ENGLISH,PONDICHERRY CENTRAL UNIVERSITY) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் ஆங்கில துறை சார்பாக நடத்தப்பட்ட ஆங்கிலப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி-வினா, எழுத்துப் போட்டி, வாசித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை சிறப்பு விருந்தினர் அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியினை ஆங்கில துறை மாணவர் M.முகம்மது ஹம்ஸா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.இறுதியாக ஆங்கில துறை மாணவி M.கிருத்திகா நன்றியுரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் இணையதள நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .
Advertisement











1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது