அபுதாபியில் தங்கக் கட்டிகளை வழங்கும் ஏ.டி.எம். இயந்திரம்!(படங்கள் இணைப்பு)

0


ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஓட்டலில் ஒரு ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பணமான திர்ஹம் நோட்டுகள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்த இயந்திரத்தில் செலுத்தினால் 10 கிராம் முதல் பல கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் வரை 320 வகை அளவுகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு 10 நிமிடமும் தங்கத்தின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிவிக்கும் இந்த இயந்திரத்தின் மேற்பகுதி முழுவதும் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஒரு ஆன்லைன் வர்த்தக நிறுவனம், இந்த வணிகத்தை செய்து வருகின்றது. அங்கிருந்து தருவிக்கப்படும் சொக்கத்தங்கத்தில் எமிரேட்ஸ் பேலஸ் ஓட்டலின் அடையாள முத்திரை பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த ஓட்டலில் தங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களில் பலர் இந்த இயந்திரத்தில் தங்கம் வாங்கிச் செல்வதில் ஆர்வமாக உள்ளனர்.







Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)