சாலை விபத்தில் பலியானவர்கள் பள்ளப்பட்டியில் உள்ள அரபி கல்லூரியில் படிக்கும் இவர்கள், கொடைக்காணலில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பள்ளப்பட்டி அருகே உள்ள அரவாக்குறிச்சியைச் சேர்ந்த டிரைவர் மோகன். இவருக்கு சொந்தமான வாடகைக் காரில் 9 பேரும் சென்றுள்ளனர். இந்த விபத்தில் டிரைவர் மோகன், தமிம் அன்சாரி அலி (25), அபிசாலி (25), சையது இப்ராகிம் (25), அப்துல் ரகுமான் (35), ஹலிவுல்லா (25), பசீர்வுல்லா (35) ( இருவரும் அண்ணன், தம்பிகள்), அப்துல் ரகீம் (கடலூர் மாவட்டம் இறையூரைச் சேர்ந்தவர்), அலிபா ஆகியோர் உயிரிழந்தனர். சேலத்தைச் சேர்ந்த கலில் ரகுமான் (46) படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவிவேண்டி பள்ளப்பட்டி ஜமாஅத்துல் உலமா சபையின் அன்பான வேண்டுகோள்....!!
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த ஆலிம்கள் விபத்தில் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள சூழலில் அவர்கள் குடும்பத்தாரின் பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு பள்ளப்பட்டி ஜமாஅத்துல் உலமா சபை மக்களிடம் நிதியுதவி திரட்டி இறந்த ஆலிம்களின் குடும்பத்திற்கும், ஓட்டுனர் மோகன் அவர்களின் குடும்பத்திற்கும் பகிர்ந்து அளிக்க முன்வந்துள்ளார்கள்.
இறந்த ஆலிம்கள் சிறிய வயதை உடையவர்கள், அவர்களின் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் கீழ்நிலையில் உள்ளது.ஆகையால் ஈரநெஞ்சம் கொண்ட சகோதரர்கள் அவர்களின் குடும்பத்தினருக்காக பொருளாதார உதவிகளை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா செயலாளர் முஹம்மது அப்துல் ஹசன் சாதலி அவர்களின் வங்கி கணக்கிற்கு நிதியுதவி அனுப்பவும்...
A.A.MOHAMED ABUL HASAN SADALI
KVB THANTHONIMALAI BRANCH
A/C NO. 1640155000026556
IFSC. CODE: KVBL0001640
இப்படிக்கு :
கரூர் மாவட்ட பள்ளபட்டி ஜமாஅத்துல் உலமா,
தொடர்புக்கு :
மௌலவி அபுல் ஹசன் ஹழ்ரத், 9360704046
மௌலவி சிராஜுத்தீன் ஹழ்ரத், 9865537339
குறிப்பு:இந்த தகவலை பற்றி நமது நிருபர் காலித் அவர்கள் மௌலவி அபுல் ஹசன் ஹழ்ரத் அவர்களை தொடர்பு கொண்டு உறுதி செய்தார்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது