பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.ரெங்கராஜன் அவர்களை இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதிரை ராஜா தலைமையில் இன்று மாலை சந்தித்தனர்.இதில் அதிரை அரசு மருத்துவமனையை 24 மணி நேர செயல்பட வேண்டி மனு ஒன்று அளித்தனர்.
இந்த மனுவில் :
தாங்கள் தொகுதிக்கு உட்பட்ட அதிரை அரசு மருத்துவமனை இரவு நேரங்களில் போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர் இல்லாததால் ஏதேனும் விபத்து ஏற்ப்பட்டால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது . இதனால் கொண்டு செல்லும் வழியில் உயிர் இழப்புகள் ஏற்ப்படுகிறது. ஆகையால் தாங்கள் அதிரை அரசு மருத்துவமனையை 24 மணி நேர செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.யுனானி மற்றும் சித்த மருத்துவர்கள் உடனடியாக நியமிக்க கோரி சுகாதார துறை இயக்குனரை தாங்கள் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மேலும் இந்த கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றி தருகிறேன் என்று எம்.எல்.ஏ.ரெங்கராஜன் அவர்கள் கூறினார்கள்.
Advertisement








1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது