மூக்குக் கண்ணாடியை எத்தனை மாதங்கள் அதிகபட்சமாக பயன்படுத்தலாம்? கண்ணாடி அணிகிறவர்கள் எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்?
கண் அறுவை சிகிச்சை மருத்துவர் கௌசிக்...
‘‘நம்முடைய கண்ணின் அளவு சராசரியாக 22.5 மில்லி மீட்டர் சுற்றளவு இருக்கும். இந்த கண்ணின் அளவு மில்லி மீட்டர் அளவு கூடினாலோ அல்லது குறைந்தாலோ அதுதான் பார்வைக் குறைபாடு என்கிறோம். இதில், 18 வயது வரை நாம் வளர்கிற காலம் என்பதால் கண்ணுடைய பவர் அதிகமாகிக் கொண்டே இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் 18 வயதுக்குட்பட்டவர்கள் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொண்டு, அதற்கேற்றவாறு கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும்.
18 வயதுக்கு மேல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு பவர் பெரும்பாலும் மாறாது. அதனால் இரண்டு வருடம் அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கண்ணாடியை மாற்றினால் போதும். இடையில், பார்வை மங்கலாவதுபோல் தெரிந்தாலோ, வெளிச் சத்தைப் பார்த்துக் கண் கூசினாலோ, கண்களிலிருந்து தண்ணீர் வந்தாலோ உடனே கண் பரிசோதனை செய்தாக வேண்டும். கண்ணாடியில் கீறல் போன்ற சேதம் ஏற்பட்டாலும் மாற்றிவிடுவது நல்லது.
40 வயதுக்கு மேல் வெள்ளெழுத்து பிரச்னை, கண்ணில் அழுத்தம், கண்புரை என்று கண் சார்ந்த பிரச்னைகளும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற மற்ற உடல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் என்பதால் வருடத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம்.முக்கியமாக, பரிசோதனையை கண் மருத்துவமனையில் செய்துகொள்வதும், மருத்துவமனையின் கண்ணாடிக் கடையில் கண்ணாடி வாங்குவதுமே சிறந்தது!’’
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது