துபாய் விசாவை இனி ஆன்லைனிலும் வாங்கலாம்!

Editorial
0

வளைகுடா நாடுகளில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் அமீரக விசா பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து துபாய் ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டு விவாகரத்துறை இயக்குநகரகத்தின் இயக்குனர் மேஜர் ஜெனரல் முகம்மது அகமது அல் மர்ரி கூறியதாவது:–

அமீரக விசா ஓமன்

உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளின் விசாக்கள் பெற்று பணிபுரிந்து வந்தால் அமீரக விசா பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் வளைகுடாவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர் அமீரக விசா பெறும் நடைமுறை மிகவும் எளிதாகிறது. இதன் மூலம் விமான நிலையங்களில் விசா பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதன் மூலம் வணிகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அமீரகம் வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதி மிகவும் எளிதானதாகவும், வசதியானதாகவும் இருக்கும். இந்த புதிய வசதியின் மூலம் விசா பெற விண்ணப்பிக்க விரும்புவோர் ரெசிடென்சி துறையின் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சாலை வழியாக பிற வளைகுடா நாடுகளிலிருந்து வருவோருக்கு இந்த வசதி கிடைக்குமா எனபது குறித்து கூறிப்பிடப்படவில்லை
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)