லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளான இன்று, ஆண்கள் மல்யுத்தம் 66 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுஷில் குமார் வெள்ளி பதக்கம் வென்று மேலும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக 2008-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 66 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜப்பானின் தத்ஷூரே யோனிமெட்ஸýவை எதிர்கொண்டார் சுஷில் குமார். இந்தப் போட்டியில் கடுமையாகப் போராடிய சுஷில் 1-3 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவரால் வெள்ளிப் பதக்கமே வெல்ல முடிந்தது. ஜப்பான் வீரர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 3-1 என்ற கணக்கில் துருக்கியின் ஷகிம் ரமாஜென்னையும், காலிறுதியில் 3-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் நைவ்ரூ ஜோவ் இக்தியாரையும் சுஷில் குமார் வென்றார்.
அரையிறுதியில் சுஷில் குமார் 3-1 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீரர் டனடாரோவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் சுஷில் குமார் தோல்வி கண்டதால் தங்கப் பதக்கம் கை நழுவியது

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது