இஸ்லாமியரை புண்படுத்தும் வகையிலான திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து எடுத்த திரைப்படத்துக்கு உலகம் முழுவதும் இஸ்லாமியர் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும், இந்திய தவுகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதைத் தொடர்ந்து தடையை மீறி இரண்டு அமைப்புகளும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. இரண்டு அமைப்பினரும் அண்ணா சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியில் அமைதியாக நின்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வன்முறை வெடித்தது. அமெரிக்க தூதரகம் மீது சராசரியாக கற்கள் வீசப்பட்டுள்ளன.
தூதரகத்தை சுற்றி 4 நவீன வசதியுடன் கூடிய போலீஸ் பூத்துகள் இருந்தன. தாக்குதல் நடத்தியவர்கள் அவற்றை பெரிய கற்களை போட்டு தாக்கி அடித்து நொறுக்கி விட்டனர். சூரிய வெப்பத்தால் செயல்பட்ட போலீஸ்பூத் ஒன்றை தலை கீழாக தூக்கிப்போட்டனர். தூதரகத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த அனைத்து உயரக நவீன கண்காணிப்பு கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அமெரிக்க கொடியும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது