அதிரையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு.....

Editorial
0
ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு.....பேரூராட்சி தலைவரின் அறிவிப்பு.....அதிரையில் பாலிதீன் பைகளுக்குத் தடை.....


அறிவிப்பு வந்த மூன்று மாதங்களில் நமதூரில் பாலிதீன் பைகளை பார்க்கக் கூட முடியவில்லை இதனால் மக்களும், வியாபாரிகளும் அபராதத்திற்க்கு பயந்து பாலிதீன் பைகளை உபயோகிக்காமல் துணிப்பைகளை உபயோகித்து வந்தனர்.ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 

தற்பொழுது இந்த அறிவிப்பை மறந்து அல்லது மறுத்து அதிரையின் எல்லா கடைகளிலும் பாலிதீன் பைகளையே உபயோகிக்கின்றனர். இதனால் நமதூரில் மீண்டும் பாலிதீன் பைகளால் சாலைகள் முதல் சாக்கடைகள் வரை ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றனர். 

அது போல் கால்நடைகளும் பாலிதீன் பைகளை விழுங்கி குடலுக்குள் அடைப்பட்டு உயிர் இழக்கும் பரிதாப நிலையும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இதில் வருத்ததிற்க்குறிய தகவல் என்ன என்றால், பொதுமக்கள் பலரும் பாலிதீன் பைகளால் விளையும் தீங்குகளை தெரிந்து கொண்டே அந்த பைகளை உபயோகிக்கின்றனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இனியாவது பேரூராட்சியின் ஆணையை மதித்து பாலிதீன் பைகளை உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

பேரூராட்சித் தலைவர் அவர்களும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து அதிரையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவுமாறு அதிரை பிறையின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)